தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் புகார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில்  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் அரசு கேபிள் டிவியில் சுமார் 24 ஆயிரத்து 619 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களாக பதிவு செய்திருந்தனர். அதன்படி அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது ஒளிபரப்பை விநியோகம் செய்திட மாவட்டத்திற்கு இரண்டு மூன்று விநியோகஸ்தர்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமித்தனர் அவர்களுக்கு ஏற்கனவே தனியாரால் போடப்பட்ட கேபிள் மூலமாக எங்களுக்கு ஒளிபரப்பு வழங்கி வந்தார்கள். தமிழக அரசின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போது அரசு கேபிள் டிவி விலை இல்லா செட் ஆப் பாக்ஸ் வழங்கியது இது ஆபரேட்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. தற்போது உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் செயல்பாடு இருந்து வருகிறது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனலாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறை துவங்கப்பட்ட பிறகு தற்போது அனலாக் முறையில் ஒளிபரப்புக்கு நிலுவை உள்ளதாக கூறி காவல்துறை மூலமாகவும் வருவாய் துறை மூலமாகவும் காலம் கடந்து ஆப்ரேட்டர்களை துன்புறுத்தி கடன்காரனை போல் அரசு அதிகாரிகள் சித்தரிப்பது மனவேதனை அளிக்கிறது .எவ்வித உபகரணங்களும் எங்களுக்கு வழங்காமல் இருந்த போதும் அரசு கேபிள் டிவிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இயற்றி தந்த எங்களை இப்படி செய்வது நியாயமானது அல்ல. அரசு கேபிள் டிவியில் பதிவு செய்ய பல்லாயிரம் ஆப்ரேட்டர்களுக்கு ஒளிபரப்பு வழங்காமலேயே நிருபித்தொகை உள்ளதாக தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஆபரேட்டர்களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது…

0Shares

Leave a Reply