மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு சார்பில் வணிகவரி இணை ஆணையரிடம் கோரிக்கை

Loading

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டலம்/ மாவட்டம் சார்பாக மாநில வணிகவரி இணை ஆணையாளர் அவர்களை சந்தித்து மண்டல, மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமையில் மனு அளித்தனர். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,
வணிகவரித்துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும் டெஸ்ட் பர்ச்சேஸ் செய்யது சம்பந்தமாகயும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித்துறையின் அறிவிப்பு 6-09-2022-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில்  வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மதுரை மாவட்டத்திற்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து சில்லரைக் கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும் போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லரை சிறு,குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் செயலாகும். வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து, கனரக வாகனங்கள், துறைமுக கண்டெய்னர்கள் மூலம் கொண்டுவரப்படும் நிலையில் அவற்றையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்களையும். ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும். எனவே, வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய வாகன நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்திட ஆவன செய்திட வேண்டும், அதற்காக தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என்பதை உறுதி செய்து, சில்லரை சிறு, குறு வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை அமைந்திட பேரமைப்பு வலிபுறுத்துகின்றது. இந்த டெஸ்ட் பரிச்சேஸ் குறித்த நடைமுறையை குறைந்தது 6மாத காலம் தொடர் விழிப்புணர்வை அனைத்து வணிர்களுக்கும் ஏற்படுத்திய பிறகே ஆண்டுக்கு 5 கோடிக்கு மேல் விற்று, வரவு செய்கின்ற வணிகர்களிடம் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சிறுகுறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  மதுரை மாவட்டம் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அழகேசன்,மாவட்ட பொருளாளர் லட்சுமி காந்தன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

One attachment • Scanned by Gmail

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *