நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நூல் வெளியீட்டு விழா
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. உபதலை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி எழுதிய நடை பழகிய பொழுதுகள் என்ற கவிதை நூல், பொன்னி நதி பார்க்கணுமே என்ற கட்டுரை நூலும் பிராவிடென்ஸ் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மலர்விழி எழுதிய புறநானூறும், பொருளியல் வாழ்வும் என்ற ஆய்வு நூலும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
அவர்கள் வெளியிட நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தாமோதரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். கட்டுரை நூலை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்க கல்வி)சுவாமி முத்தழகன் அவர்கள் வெளியிட கோவை மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்க கல்வி) புனிதா அந்தோணியம்மாள் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆய்வு நூலை உதகை அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் எபனேசர் அவர்கள் வெளியிட பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷீலா அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி செயலர் அருட்சகோதரி. ஆனி பாம்பிளானி அவர்கள், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி) ஜெயக்குமார் அவர்கள், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை கல்வி)கோபால் அவர்கள், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி அவர்கள், ஓய்வு பெற்ற இரவு காவலர் செல்வி றோசிலியம்மாள் அவர்கள், புனித அந்தோணியார் மேனிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்(ஓய்வு) புலவர் பிரான்சிசு அவர்கள், பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி இணைப்பேராசிரியர்
(ஓய்வு) சுஜாதா அவர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் R.ரங்கராஜன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் பேசிய நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசு தனி பாடவேளை ஒதுக்கி மாணவர்களை உற்சாகப் படுத்தி வரும் இக்கால சூழலில் பள்ளிக் கல்வி துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த மூன்று நூல்களும் வெளியிடப் படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.நூல்களை எழுதிய ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் திரு.சுகுமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.