இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் ஒத்தாசையை எதிர்பார்க்க வேண்டாம். ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்து. அதனால் பணத்தை இழக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். வெளியூர் பயணங்களால் அதிக நன்மை அடைய முடியாது. எதிர்பார்த்த வேலை உயர்வு கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்

ஆள் பற்றாக்குறையால் வீடு கட்டும் வேலையில் தாமதம் ஏற்படும். கண்ட இடங்களில் சாப்பிடாதீர்கள். அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவஸ்தையை தரும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய நிலை உருவாகும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். பங்குப் பரிவர்த்தனை முதலீடு, பந்தயங்கள் பயனளிக்காது.

மிதுனம்

குடும்பத்தில் சுமுகமான நிலை உருவாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும். வரக்கூடிய உபரி வருமானங்களால் கடந்தகால கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுவது நல்லது. தடையில்லாமல் பணம் வரும்.

கடகம்

விருப்பம் இல்லாத இடங்களுக்கு அரசுத்துறையில் பணிமாற்றம் ஏற்படலாம். வெளியில் சொல்ல முடியாத மனக்குறை தம்பதிகளிடம் உண்டாகலாம். அடுத்தவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டாதீர்கள். புதிய வேலைக்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு மிகவும் கலகலப்பாக இருக்கும்.

சிம்மம்

வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளால் மனச் சஞ்சலம் அடைவீர்கள். ஊழியர் பற்றாக்குறையால் உற்பத்தி குறையும். புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கு வெளியூர் பயணம் செல்வீர்கள். பணி நிமித்தமாக சில நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும். நியாயமான காரியங்களில் பின்வாங்க மாட்டீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் அவ்வளவு சாதகமாக இருக்காது.

கன்னி

வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடப்பீர்கள். வாகன வசதிகள் உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில்துறை முன்னேற்றம் கண்டு சீரான பாதையில் செல்லும். அந்தஸ்தை காட்ட ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

துலாம்

திட்டமிட்டு செயல்பட்டாலும் காரியங்களில் தடை உண்டாகும். விருந்தினர்களிடம் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்‌ விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்கள் கடுமையாக வேலை செய்து பலனைக் காண்பார்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். திருமணம் கைகூடி வரும்.

விருச்சிகம்

எடுக்கும் காரியங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ஆலோசனை செய்து கொள்ளுங்கள். சமுதாயச் சேவையால் நற்பெயரும் புகழும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்துவார்கள். பணவரவு எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்.

தனுசு

வியாபாரத்தில் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபட வேண்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்வோர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்து கையிருப்பு கரையும். அரசு பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் சுமாராக நடக்கும். ஐடி துறையில் போட்டிகளை சந்திப்பீர்கள்.

மகரம்

நிலம் விற்ற காசு கைக்கு வர தாமதமாகும். வீட்டை புதுப்பிக்கும் வேலையில் கவனத்தை செலுத்துவீர்கள். சகோதரி குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவை தீர்த்து வைப்பீர்கள். நினைக்கின்ற காரியங்கள் அலைச்சலுக்கு பின்னரே நிறைவேறும். தொழில் ஏற்ற இறக்கமான நிலையில் நடைபெறும். அரசாங்க அதிகாரிகளால் இடையூறுகளை சந்திப்பீர்கள்.

கும்பம்

ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். பங்குச் சந்தை வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உடல்நிலையில் ஆரோக்கியம் மேம்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

எதிரிகளே வியக்கும் அளவுக்கு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் உத்திகளை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். போட்டி பந்தயங்களில் நல்ல அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் உரிய நேரத்தில் உதவி செய்வார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. மனைவி மக்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *