திருவள்ளூர் மாவட்டத்தில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 69 வழக்குகள் பதிவு

Loading

திருவள்ளூர் அக் 26 : 
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.  விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.  அதிலும் குறிப்பாக நேரக் கட்டுப்பாடு, மருத்துவமனை அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது, டின், பாட்டில் ஆகிவவற்றைப் பயன்படுத்தி பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் 24 காவல் நிலையங்கள் உள்ளன.  இந்த 24  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 69 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர் டவுனில் 10 வழக்குகளும், தாலுக்கா காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், கடம்பத்தூர்-2, மப்பேடு-4, மணவாளநகர் 4, கும்மிடிப்பூண்டி-2, சிப்காட்-2, ஆரம்பாக்கம் -2, பாதிரிவேடு -3, கவரப்பேட்டை 2 புல்லரம்பாக்கம்- 1, ஊத்துக்கோட்டை-2, பெரியபாளையம்-2 வெங்கல்-2, திருத்தணி-2 திருவாலங்காடு 1, கனகம்மாசத்திரம் -5 ஆர்.கே.பேட்டை – 5 பள்ளிப்பட்டு 5, பொதட்டூர்பேட்டை 3, திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *