நீலகிரி மாவட்டம்  குன்னூர் உதகை பகுதியில்  சாலை பணி நடை பெறுகிறது என்று எவ்வித அறிவிப்பு பலகை வைக்கபடாமல் உள்ள நிலை!

Loading

நீலகிரி மாவட்டம்  குன்னூர் உதகை
செல்லும்  சாலையில் பிளாக்பிரிட்ஜ் பகுதியில் சாலை பணிக்காக சாலையின்  மிக குறுகிய வளைவில்  குழியினை தோண்டி விட்டு சாலை பணி நடைபெறாமலும், இந்த பகுதியில்  சாலை பணி நடை பெறுகிறது என்று எவ்வித அறிவிப்பு பலகை வைக்கபடாமல் உள்ள நிலை!
 அரசு பேருந்துகள், மருத்துவ வாகனங்கள்,
பள்ளி வாகனங்கள் தனியார் வாகனங்கள், செல்லும் மிக குறுகிய வளைவு சாலையில்
 எதிரெதிர வரும் வாகனங்களுக்கு  வழி விட  முடியாமலும்,   வாகன ஓட்டிகள்  அச்சத்துடன் வாகனங்களை    ஓட்டும் நிலை.
எதிரெ வரும் வாகனங்களுக்கு வழி விடும் நேரத்தில் குறுகிய வளைவு பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வாகனங்கள் குழியில் விழும் நிலை.
அது மட்டுமின்றி இந்த சாலையில் இரவு நேரங்களில் தெரு விளக்கு எரியாத நிலையில்  நடந்து செல்லும் பொது மக்கள் இந்த பகுதியில் கீழே விழுந்தால்   பாதிப்பு ஏற்படும் நிலை.
மேலும்  இந்த பகுதிகளில்  காட்டெருமைகள் அதிகம் உலா வரும் நிலையில் ,
இரவு நேரங்களில் இந்த பகுதியில் நடந்து  செல்லும் போது
இந்த பகுதியின் அருகே சென்றால்
 கீழே விழும் நிலை.
அனைத்து தரப்பினரும் பாதிக்கபடாமல் இருக்க,
 இந்த பகுதியில்  சாலை பணியினை விரைந்து முடிக்கவும், இல்லையெனில் யாரும் பாதிக்கபடாமல் இருக்க, இந்த குறுகிய
வளைவு பகுதியில் தோண்டியுள்ள குழியினை சரி செய்ய இதன்  சம்மந்தப்பட்ட துறையும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
0Shares

Leave a Reply