பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. மாநில செயலாளர் அணுசுவை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி மண்னாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி‌.எஸ். பாளையம் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. மாநில செயலாளர் அணுசுவை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி மாநில தலைவி டாக்டர். ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பிந்து சுரேஷ், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி மற்றும் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *