மீண்டும் அனுஷ்கா திருமண வதந்தி

Loading

அனுஷ்காவும், பிரபாசும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன.
நடிகை அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. காதலை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்றும் சிலர் பேசி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாசின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது. கிருஷ்ணம் ராஜு மரணம் குறித்தும் வலைத்தளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்தார். அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜு விரும்பியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அனுஷ்காவும், பிரபாசும் காதலிப்பது உறுதி என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *