ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை கொரட்டூர்  பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் திருவிழா

Loading

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை கொரட்டூர்  பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
சென்னை கொரட்டூரில் உள்ள அருள்மிகு பாடலாத்திரி சியாத்தம்மன் ஆலயத்தில் ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு 4ஆம் வாரம் கொரட்டூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மதியம் சுமார் ஆயிரம் நபர்களுக்கு முருகப் பெருமானுக்கு வேல் தரித்து,சடல் மற்றும் மிளகாய் தூள் அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மாலை 6மணியளவில் ஆயிரம் பக்தர்கள் “தீ ” மிதித்து அம்மனுக்கு நேற்றிக்கடன் செலுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஆடி மாதம் 5வது வாரம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்”திருத்தேர் வீதி உலா” மற்றும் படையல் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் கொரட்டூர் வாழ் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மங்கல வாத்தியங்கள் முழங்க மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவிழாவை விழாகுழுவினர் வெகுசிறப்பாக நடத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *