ஆகாஷ் பைஜூஸ் ‘அனைவருக்கும் கல்வி’ முன்முயற்சியை தொடங்கியது
சென்னை : இந்திய அரசின் ஆசாதிகா அமிர்த் மஹோத்சவ் முயற்சியை கொண்டாடும்
வகையில், தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் தேசிய அளவில் முதன்மையாக விளங்கும்
ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும்
மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை ஏற்பாடு செய்து வருகிறது. ‘அனைவருக்கும்
கல்வி’ என்ற திட்டமானது புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 7ம்வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை படிக்கும் கிட்டத்தட்ட 2,000 மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு
இலவச நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மற்றும் உதவித்தொகைகளை வழங்குவதற்கான நாடு
தழுவிய திட்டமாகும்.
அனைவருக்கும் கல்வி ‘ முன்முயற்சி குறித்து கூறிய ஆகாஷ் பைஜூēஸ் நிர்வாக
இயக்குநர் திரு. ஆகாஷ் சௌத்ரி, “நீண்ட காலமாக இத்துறையில் இருப்பதால், மருத்துவம்
மற்றும் பொறியியல் கல்விக்கான விருப்பங்கள் நம் நாட்டில் மட்டுமே வளர்ந்து வருவதை
காண்கிறோம். இந்த இரண்டு துறைகள் மற்றும் சுய வளர்ச்சி மற்றும் சமூக
பங்களிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து எங்கள் இளம் மனது பிரமிப்பில் உள்ளது.
இருப்பினும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய
தனியார் பயிற்சியை பெற முடியாத மில்லியன் கணக்கான மாணவர்கள் உள்ளனர்.
பெண்களின் கல்விக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவழிக்க முன்வராத
குடும்பங்களின் பாலின ஏற்றத்தாழ்வு, மலிவு விலை பிரச்சினையை கூட்டுகிறது.இந்த
சூழல்கள் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுவாக
மாணவிகளின் மன உறுதியை குறைக்கின்றன. ‘அனைவருக்கும் கல்வி ‘ மூலம் இந்த
மாணவர்களின் தொழில்முறை படிப்புகளுக்கு பயிற்சிக்கான வாய்ப்பை விரிவுபடுத்த
எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.” என்றார்.