வடமாநிலதவரால் “சுமை தூக்குவோருக்கும்” சிக்கல் .!

Loading

ஈரோடு ஜூலை 2

ஈரோடு அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வடமாநில தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது
தமிழகத்தை நோக்கி வட மாநிலத்தவர்கள் பிழைப்பு தேடி லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருக்கின்றனர் ஈரோடு திருப்பூர் சென்னை கோவை ஆகிய நகரங்களை குறிவைத்து வேலை தேடி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் சேனாதி பாளையத்தில் தமிழக அரசின் நுகர் பொருள் வாணிபக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

இங்கு அரிசி,பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் 20க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக வட மாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு, லாரிகளில் பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து பல வருடங்களாக இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கிடங்கின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்த படமாட்டார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *