சிங்கப்பூர் பயணத்துறை கழகம், St+art India பவுண்டேஷன் உடன் இணைந்து தனது SingapoReimagine மறுதுவக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுபட்ட கலை நிகழ்ச்சியை நடத்துகிறது
சென்னை, மார்ச் 19-
சிங்கப்பூர் பயணத்துறை கழகம், St+art India பவுண்டேஷன் உடன் இணைந்து தனது SingapoReimagine மறுதுவக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுபட்ட கலை நிகழ்ச்சியை நடத்துகிறது
St+art India உடன் இணைந்து சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ட்ரீம்ஸ் ஃப்ரம் த ஃப்யூச்சர்ஸ்Dreams from the Futures” தமிழில் ‘எதிர்காலக் கனவுகள்’என்ற தலைப்பிலான பன்முக கலாச்சார நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவை நடத்த உள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மிஸ்டர். ஒங் [Mr. Ong] உணவகத்தில் சிங்கப்பூரின் பிரத்தியேகமான உணவு வகைகளுடன் மாலை உணவு விருந்து நடைபெறவுள்ளது. இவ்விருந்தில் சமூகத்தில் தாக்கத்தை உருவாக்க கூடிய உள்ளூர் இன்ப்ளூயன்ஸர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிங்கப்பூரில் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட அனுபவங்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில், சிங்கப்பூர் தனது ப்ரத்யேக பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் அனைத்து இந்திய நகரங்களுக்கும் இடையே தனிமைப்படுத்துதல் இல்லாத, இருவழி தடுப்பூசி பயண வழித்தடத்தை (Vaccinated Travel Lane (VTL)) 16 மார்ச் 2022 முதல் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.