செம்பியம் பகுதியில் முன் விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது
சென்னை, செம்பியம், ஜமுனா பாய் 2வது தெருவில் வசித்து வரும் ராஜு, வ/57,
த/பெ.சுப்பிரமணியன் என்பவருக்கும் எதிரி விஸ்வா (எ) விஸ்வேஸ்வரன் என்பவருக்கும்
பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த
28.02.2022 அன்று காலை சுமார் 10.30 மணியளவில் செம்பியம், M.H ரோடு, பிருந்தா
தியேட்டர் எதிரில் ராஜு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த விஸ்வா (எ)
விஸ்வேஸ்வரன் உட்பட 3 நபர்கள் மேற்படி ராஜுவை, கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்
சென்றனர்.
இச்சம்பவத்தில் இரத்த காயமடைந்த ராஜு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் மேற்படி சம்பவம் குறித்து, K-1 செம்பியம் காவல்
நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
K-1 செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர
விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.விஸ்வா (எ) விஸ்வேஸ்வரன்,
வ/31, த/பெ.பார்த்தசாரதி, சுங்குவார் அக்ரஹாரம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை,
2,லோகேஷ், வ/19, த/பெ.குமார், G.M பேட்டை, காசிமேடு, சென்னை ஆகிய 2 நபர்களை
கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர
வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி புகார்தாரர் ராஜு மற்றும் எதிரி விஸ்வா (எ)
விஸ்வேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பல நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி
பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில்
வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளதும், மேலும்
மேற்படி இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து
வந்த நிலையில் சம்பவத்தன்று எதிரி விஸ்வா (எ) விஸ்வேஸ்வரன் தனது கூட்டாளிகளுடன்
சேர்ந்து மேற்படி புகார்தாரர் ராஜுவை கத்தியால் தாக்கி கொலை முயற்சி சம்பவத்தில்
ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்
என்ற தலைமறைவு குற்றவாளியை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில்
ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர்,
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.