சூர்யகுமார் யாதவ், தீபக் சாகர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகல்

Loading

லக்னோ:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை (24-ந் தேதி) மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் மற்றும் மிட்டில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பீல்டிங் முயற்சியின் போது சூர்யகுமாருக்கு ஒரு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது,  தீபக் பந்துவீச்சின் போது வலது தசைபிடிப்பு ஏற்பட்டது.” என கூறப்பட்டுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *