Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை பிப்ரவரி 07,2022
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை பிப்ரவரி 07,2022
சென்னை: பிலவ வருடம் தை 25ஆம் தேதி பிப்ரவரி 07, 2022, திங்கட்க்கிழமை. சப்தமி மறுநாள் காலை 06.16 மணி வரை அதன் பின் அஷ்டமி. அசுவினி மாலை 05.58 மணி வரை அதன் பின் பரணி.சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே, சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு நீங்க சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இருப்பீர்கள். வீட்ல தெய்வ வழிபாடு செய்வீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்று உங்களுக்கு பணம் தாராளமாக வரும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மைகள் நடைபெறும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிப்பதால் திடீர் விரைய செலவுகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம் கவனம். வேலை செய்யும் இடத்தில் பொறுப்போடு நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும்.பண வரவு அதிகரித்தாலும் செலவுகளும் கூட வரும். இன்று உடல்நிலையில் ஏற்பட்டிருந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எடுத்த காரியம் வெற்றியாகும். சொந்த பந்தங்களினால் நன்மைகள் நடக்கும். இன்றைய தினம் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் பேச்சில் கவனம். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணிக்கிறார். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. திடீர் மருத்துவ செலவுகள் வரும். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு தேடி வரும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. வேலை விசயமாக புதிய வாய்ப்புகள் வரலாம். யோசித்து முடிவு செய்யுங்கள். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணவரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள், மனைவி வழி உறவினர்களால் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் வியாதிகள் விலகும். சந்தோஷமான நாளாக அமையும்.
கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்த்து விடவும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை. தொழில் ரீதியாக இன்றைய தினம் பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.
துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணிக்கிறார். ரொம்ப ஆரோக்கியமாகவும் நேர்மறை எண்ணங்களோடும் இருப்பீங்க. பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம் என்று நினைப்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். திருமண வரன் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் வரும். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். செய்யும் தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் உங்க ராசிக்கு 6ஆம் வீட்டில் பயணிக்கிறார். உங்க உடல் நலத்தில கவனம் செலுத்துங்க. கடன்கள் அடைபடும் அளவிற்கு பணம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பண முதலீடுகளில் கவனமாக இருங்க. இன்றைக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் தாராள பண வரவும், கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும்.
தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு வெற்றிகரமான நாள். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். உடம்பில் திடீர் நோய்கள் தோன்றுவது போல இருக்கும் பயப்படாதீங்க. உங்களுக்கு சில பிரச்சினைகள் தேடி வரலாம் கவனமாக ஹேண்டில் பண்ணுங்க. குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். உற்சாகமான நாளாக அமையும். இன்று குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பணவரவு நன்றாக இருக்கும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.
மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணிக்கிறார். இன்றைக்கு சுகமான நாள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டில் உள்ளவர்களின் பேச்சில் கவனமாக இருங்க. வேலையில் இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு நீங்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்ப விசயங்களில் யாரையும் தலையிட விட வேண்டாம். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.
கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். நிறைய நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்டம் வரப்போகுது. வசதிகள் பெருகும் நாளாக அமையப்போகிறது. நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணிக்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பணவரவு ஒரு பக்கம் வந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனமாக பேசுங்க. உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். இன்று வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.