ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
புதுடில்லி, ஜன.11 டிஜிட்டல் வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ் டேட் துறையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கரோனா சூழல் இணைய வழி கல்வி, வீட்டில் இருந்தே பணி யாற்றும் வாய்ப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதோடு, ஒவ் வொரு துறையிலும் தனியே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும், கரோனா சூழல் காரணமாக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சவாலான நிலையை சமாளிக்க புதுமையான வழிகளை பின்பற்றி வரும் நிலையில், வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்கள் புதிய வீடுகளை தேடி கண்டறியும் முறையும் மாற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எதிர் கால போக்குகளையும் பார்க்கலாம்.
டிஜிட்டல் வழி
கரோனா தாக்கத்தால் பொது முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப் பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வீடு வாங்க விரும்புகிறவர்கள், விற்ப னையாளர்கள், இடைத் தரகர்கள் என பல்வேறு தரப்பினரும் டிஜிட் டல் வழியை நாடத் துவங்கி யுள்ளனர். விலை நிலவரம், வீடுகளின் அமைவிடம் உள்ளிட்ட தகவல் களை தெரிந்து கொள்ள, பெரும்பா லானோர் ரியல் எஸ்டேட் இணைய தளங்களை அதிகம் பயன்படுத்து கின்றனர். இதற்கு முன்னரே கூட, ரியல் எஸ்டேட் இணையதளங்களை பலரும் பயன்படுத்தினாலும், தற் போது இது பல மடங்கு உயர்ந் திருக்கிறது. டிஜிட்டல் பயன் பாட்டில் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் சில மாதங்களில் நிகழ்ந்துள்ளன என ரியல்எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.வாடிக் கையாளர்கள் இணையதளங்கள் வழியே தகவல்களை நாடும் நிலை யில், ரியல் எஸ்டேட் நிறு வனங்களும் வாடிக்கையாளர்களை சென்ற டைய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன.
வி.ஆர்., எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக வாடிக் கை யாளர்களுக்கு டிஜிட்டல் முறை யில் புதிய வீடுகளை பார்க்க வைக்கும் உத்தி பின்பற்றப்படுகிறது. மேலும் பல நிறுவனங்கள் முப்பரிமாண செயலி வாயிலாக வீடுகளை சுற்றி காண்பிக்கின்றன. ஏ.அய்., எனும் செயற்கை நுண்ணறிவு உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.