தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கொரோனா தடுப்பு குறித்து பூனாம்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Loading

திருச்சி, அக்டோபர் 09, 2021
.தூய்மை இந்தியா திட்டம், கொரோனா தடுப்பு, சுதந்திர இந்தியாவின்
வைர விழா, ஒரே பாரதம், உன்னத பாரதம் குறித்து விழிப்புணர்வை
ஏற்படுத்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி திருச்சி
பூனாம்பாளையத்தில் நேற்று நடத்தப்பட்டது.
இதில் தலைமை உரையாற்றிய பூனாம் பாளையம் பஞ்சாயத்து
தலைவர் வி.ஹரிகிருஷ்ணன், அனைவரும் கொரோனா தடுப்பூசி
போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அறிமுக உரையாற்றிய, திருச்சி கள விளம்பர அதிகாரி திரு
கே.தேவி பத்மநாபன் கூறுகையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின்
நோக்கம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை
உருவாக்குவது மற்றும் திடகழிவு மேலாண்மை’’ என குறிப்பிட்டார்.
75வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடும்போது, அதிகம்
அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்வது
பற்றியும் அவர் பேசினார்.
டிபி துணை இயக்குனர் டாக்டர் எஸ் சாவித்திரி பேசுகையில்,
‘‘கொரோனா தடுப்பூசி தவிர, முககவசம் அணிவதன் முக்கியத்துவம்
குறித்தும் வலியுறுத்தினார்.
மணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரி திரு ஜே பெரியசாமி
பேசுகையில், வருமுன் காப்போம் என்பதுதான் சிறந்தது எனவும்,
அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்
என்றார்.
மணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரி டி.லதா பேசுகையில்,
‘‘ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி சிறப்பு
முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

திருச்சி மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு
நந்தகுமார், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும்
பொது இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டது பற்றி பேசினார்.
பூனாம் பாளையத்தின் தூய்மை பணிகளை நேரு யுவ கேந்திர
தொண்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுடன் நேரு யுவ கேந்திரா
மாவட்ட அதிகாரி திருமதி எஸ் சுருதி மேற்கொண்டார்.
வரவேற்புரை நிகழ்த்திய திரு கள விளம்பர உதவியாளர் திரு
கே.ரவிந்திரன், மணச்சநல்லூர் பஞ்சாயத்து யூனியன், சிறுகம்பூர்
அரசு ஆரம்ப சுகாதார மையத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த
தகவல் தொடர்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ் கண்ணன், நேரு யுவ கேந்திர
அமைப்பின் திரு மகேஸ்வரன், பஞ்சாயத்து செயலாளர் திரு பால
கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பி பால கிருஷ்ணன் மற்றும் இதர
அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தூய்மை குறித்த துண்டு
பிரசுரங்கள், துணிப் பைகள் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டன.
தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காசநோய்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கண்காட்சியும்
நடத்தப்பட்டது. தூய்மை இந்தியா திட்ட மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தூய்மை உறுதிமொழி
எடுக்கப்பட்டன. புள்ளம்பாளையத்தில் நேரு யுவ கேந்திரா
அமைப்பினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக்
குப்பைகளை சேகரித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *