மேகதாது அணை விவகாரம் – அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
சென்னை:
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
விவசாயிகள் நலனை காக்க அனைத்துத் தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ன்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது