திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய எழுத்தறிவு திட்டம் சார்பில் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உதவிகள் :
![]()
திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய எழுத்தறிவு திட்டம் சார்பில் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முகக்கவசம், ஆக்ஸிமீட்டர், தெர்மாமீட்டர், ரத்த அழுத்த கண்காணிப்பு கருவி, குழந்தைகளின் இதய துடிப்பை கண்டறியும் கருவி, பாதுகாப்பு உடை கவசம் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

அமெரிக்க வாழ் இந்தியர்களால் துவங்கப்பட்டு செயல்படுகின்ற இந்திய எழுத்தறிவு திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்கும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல், வாழ்க்கை திறன் குறித்த பயிற்சிகள், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவுதல், இலவச கட்டாய கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை கல்வித்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த 14 ஆண்டுகளாக செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொரோனா குறித்தும், கோவிட் தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வினையும், சிறுவர் -சிறுமியர் கல்வி கற்பதற்கு தன்னார்வலர்கள் மூலம் உதவி செய்தல் போன்ற பணிகளையும் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்து வருகிறது. ஏ.எல்.ரங்கராஜன் முயற்சியில் புழல், சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகக்கவசம், ஆக்ஸிமீட்டர்,தெர்மாமீட்டர், ரத்த அழுத்த கண்காணிப்பு கருவி, குழந்தைகளின் இதய துடிப்பை கண்டறியும் கருவி, பாதுகாப்பு உடை கவசம் போன்ற மருத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கிவ் இந்தியா உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அவர்களின் வேண்டுகோளின் ன் பேரில் இந்திய எழுத்தறிவு திட்டம் வழங்கியது.
இந்திய எழுத்தறிவு திட்ட கள ஒருங்கிணைப்பாளர்கள் சூரியன், சரஸ்வதி மற்றும் நவீன் ஆகியோர் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று வழங்கினர்
