ஒட்டன்சத்திரத்தில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம்,சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து, “பெட்ரோல், டீசல் விலையை குறைத்தித்திட வேண்டும், கொரோனா நிவாரண நிதியாக ரூ7,500 வழங்கவேண்டும்,
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை உடனே வழங்கவேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசிகள் தயாரிப்பு மையத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், நகர செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.