Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் புதன் கிழமை ஏப்ரல் 28, 2021 சென்னை: பிலவ வருடம் சித்திரை 15 ஆம் தேதி ஏப்ரல் 28, 2021 புதன்கிழமை. துவிதியைத் திதி இரவு 01.34 மணி வரை அதன் பின் திருதியை. விசாகம் மாலை 05.12 மணி வரை அதன் பின் அனுசம். சந்திரன் இன்றைய தினம் துலாம் ராசியிலும் விருச்சிக ராசியிலும் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மீனம், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தொலைதூரப் பயணங்களில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம் சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன உற்சாகம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய தெம்பை கொடுக்கும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மனதில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு வருகிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்கள் உதவி செய்வார்கள். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்திற்குள் வருகிறார். செய் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பெண்களுக்கு ரொம்ப நல்ல நாள் மனதில் உற்சாகம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இதில் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 11 மணிக்கு மேல் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். பயணங்களால் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *