பேஜ்3 சலோன் இப்போது சென்னை, பெசன்ட் நகரில் திறக்கப்பட்டுள்ளது
சென்னை, 14th ஏப்ரல் 2021 : அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், உலக தரத்தில்
மேம்படுத்தப்பட்ட சலூன் மற்றும் ஸ்பா சேவைகளை வழங்கும் பேஜ்3 சலோன் நிறுவனத்தின் மிக
பிரமாண்டமான கிளை (14.04.2021) சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது. பிக் பாஸ்
புகழ் 'பாலாஜி முருகதாஸ்', 'சம்யுக்தா சண்முகநாதன்’ மற்றும் உடற்பயிற்சியாளர் ‘பரத் ராஜ்’
ஆகியோர் இந்த கிளையை துவக்கி வைத்தனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர் செல்வி. ரம்யா
அவர்களின் இந்த முயற்சியின் குறிக்கோள், தொழில்முனைவோர் துறையில் பெண்களை
மேம்படுத்துவதோடு, நிலையான நிதி சுதந்திரம் மற்றும் நல்வாழ்வை நோக்கி அவர்களை
வழிநடத்துவதும் ஆகும். எனவே இது இருசாராருக்கும் நிச்சயம் வெற்றி அளிக்கும் ஒரு முயற்சி.
இந்த புதிய கிளையானது பெசன்ட் நகரில், கடற்கரைக்கு மிக அருகில் 2,750 சதுர அடி பரப்பளவில்
அமைந்துள்ளது. தரைத்தளத்தில் பேஜ்3 சலோன் அமைந்துள்ளது.
முதல் மாடியில் இந்த குழுமத்தின்
மற்றுமொரு உருவாக்கமான ஆத்மா ஸ்பா என்ற முழுமையான சொகுசு ஸ்பா அமைந்திருக்கிறது. இந்த
பெசன்ட் நகர் கிளையில் விஐபி அறைகள், மணப்பெண் அலங்கார அறைகள் மற்றும் தனித்துவமாக
நியமிக்கப்பட்ட ஸ்பா அறைகள் உள்ளன. இந்த பெசன்ட் நகர் கிளை ஒரு நேர்த்தியான
சூழ்நிலையையும், நட்பாக பழகும் ஊழியர்களையும் கொண்டுள்ளது. உங்கள் வருகையை ஒரு
இனிமையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இது மாற்றும் என்பது உறுதி. தனித்துவமான,
புத்துணர்ச்சியூட்டும் புதிய சூழலை இந்த ஸ்பா வழங்குகிறது.
இந்நிறுவன விரிவாக்கம் குறித்து பேஜ்3 சலோனின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான
சண்முக குமார் மேலும் கூறுகையில், “இது இந்த பிராண்டிற்கு மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது.
சென்னையில் இதற்கு எப்போதுமே நிறைய வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் எப்போதும்
கவனித்திருக்கிறோம். சென்னையில் இது ஐந்தாவது சலூன், மற்றும் இந்தியாவில் 14-வது சலூன்.
இதை சந்தையில் அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. PAGE 3-ன் சிறந்த
முடி மற்றும் அழகு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும், சென்னையின் தகிக்கும்
வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும்,
உங்கள் தலைமுடி சேதமடையாமல் பாதுகாக்கவும்
நீங்கள் நிதானமான மற்றும் உடனடி கண்டிஷனிங் இங்கு பெறலாம். எங்கள் சலூன் புரொடக்ட் மற்றும்
நிபுணத்துவத்தின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. இது பெண்களுக்கு அலங்காரம் மற்றும்
அழகு பரிசோதனை செய்ய தூண்டுகிறது. முடிதிருத்தம் மற்றும் வண்ண சிகிச்சைகள் முதல் முடி
பராமரிப்பு வரை சில சிறந்த சேவைகளை பேஜ்3 சலோன் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இங்கு
அமைந்துள்ள அழகு அறைகள் முகம் மற்றும் உடல் சிகிச்சைகளை அதிகம் பயன்படுத்த
வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது" என்றார்.
“தாங்கத்தகு விலையில் சொகுசு” என்பது தான் இந்நிறுவனத்தின் குறிக்கோள். உலகம் இந்த
கொரோனா போன்ற தொற்றுநோய் உடன் போராடி வரும் இந்த கடுமையான சூழலில் பேஜ்3 SALON
அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் கடுமையான சுத்திகரிப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கிறது.
அமெரிக்காவின் US FDA and EPA approved BIOTAB 7 Sanitation-ஐ ஏற்றுக்கொண்ட இந்தியாவின்
முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் புது கருவிகள்
மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
பேஜ்3 சலோன் Kerastase, Skeyndor, Loreal, OPI products போன்ற மிகப்பெரிய தயாரிப்புகளை
தேர்ந்தெடுத்து சேவைகளை வழங்குகிறது. ஒரு முழுநேர நகம் (Nail) தொழில்நுட்ப வல்லுநர் மற்றும்
கூடுதல் ஒப்பனையாளர்களுடன், ஒரு முழு விரிவான நாளை நீங்கள் அனுபவிக்க, தேவையான
அனைத்தையும் இந்த சலூன் கொண்டுள்ளது. சிகையலங்காரம், ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும்
உடல் சீர்ப்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களின் துணையுடன் உலகத்தரம்
வாய்ந்த அனுபவத்தை இந்த PAGE 3 SALON உங்களுக்கு வழங்குகிறது.
2009 ஆம் ஆண்டில் உலக தரத்துக்கு இணையாக, தாங்கத்தகு விலையில் ஆடம்பரமான மற்றும்
சமரசமற்ற அழகு சேவைகளை வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன் பேஜ்3-யின் திட்டம்
உருவாக்கப்பட்டது. முடி மற்றும் அழகு பராமரிப்பு துறையில் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தத்தை
முன்னெடுத்து, சர்வதேச அழகு துறையில் தங்களை நிரூபித்த கே.வீணா மற்றும் சி.கே.குமாரவேல் பேஜ்
3 நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் வி.சண்முக குமார்
இந்த நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்துகிறார்.