திமுகவின் கோட்டை குடியாத்தம் அதில் மீண்டும் நாம் வெற்றி பெறுவோம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி

Loading

குடியாத்தம்.மார்ச்18. குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பரிதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் வீரமணி பேசியதாவது

குடியாத்தம் அதிமுகவின் கோட்டை அதில் மீண்டும் வெற்றி பெறுவோம் எதிர்க்கட்சியாக இருந்த போது நகராட்சி நிர்வாகத்தை பிடித்த மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சி அமைப்பு உள்ள நகரம். இங்கு கடந்த காலத்தில் நம் உழைப்பில் வெற்றியை பெற்று பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு கட்சிக்கு துரோகம் செய்து ஓடிவிட்டனர்.அவர்களை நாம் நினைத்துப் பார்க்கும் நேரமிது ..இங்கே நம் கழக வேட்பாளர் பரிதா அப்படிப்பட்டவர் அல்ல கொள்கைக்காக நிற்பவர். நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்ற புரட்சித்தலைவர் பாடல் வரிகளுக்கு ஏற்ப கொள்கைப் பிடிப்புள்ளவர். பல இடங்களுக்கு நான் பிரச்சாரத்திற்காக செல்லும்போது பாமகவினர் ,த.மா.க ,புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி புரிந்த வகையில் மத்திய அரசிடமிருந்து நம் அம்மாவின் அரசு 30 விருதுகளைப் பெற்றிருக்கிறது இதுவே மக்களிடம் நமக்கு கிடைத்த நல்ல சான்றிதழ் இவ்வாறு பேசினார்.
Attachments area

0Shares

Leave a Reply