தமிழகத்தில் ஈரோடு நகரில் “அனைத்து உலக மக்கள் நல உரிமை கழகம்” என்ற புதிய கட்சியைத் துவக்கியுள்ளனர்
ஈரோடு பிப்ரவரி 19
தமிழகத்தில் ஈரோடு நகரில் “அனைத்து உலக மக்கள் நல உரிமை கழகம்” என்ற புதிய கட்சியைத் துவக்கியுள்ளனர் கட்சியின் மாநிலத்தலைவர் கண. குறிஞ்சி தலைமை ஏற்று காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ் ,தந்தைபெரியார் ,அம்பேத்கர் ஆகிய திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர் அறிமுக உரையை ராஜேந்திர பிரபு நிறுவனர் தலைவர் அனைத்து உலக மக்கள் நல உரிமை கழகம் நிகழ்த்தினார் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழக்கறிஞர் ப.பா மோகன், ரத்தினசாமி திராவிட விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம் ,மாநில அமைப்புச் செயலாளர் திராவிட கழகம் வழக்கறிஞர் நிலவன், மகாலிங்கம் ,குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர் முருகேசன் சித்த மருத்துவர் நன்றி உரை நிகழ்த்தினார்.