சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட 531 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா…
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிச்செல்வன் அவர்கள், தேவசகாயம் மவுண்ட் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு காரில் சந்தேகத்திற்கிடமாக இருவர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன்(48) S/O குலசேகரப் பெருமாள் மற்றும் மெஜில் ராஜ்(42) S/O சிவன்பெருமாள், என்பதும், அந்த காரை தீவிர சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட 531 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. அதனை அந்த பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டுபிடித்தார். உடனே இது தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் கண்ணன் அவர்கள் அவர்களிடமிருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்…