மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை பணிநீக்கம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 42சமையலர் பணியிடங்களை நிரப்ப இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் மீது புகார் எழுந்தது.இந்தநிலையில் அவர் திடீரென தர்மபுரிக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சமையலர் பணி நேர்காணலில் பங்கேற்ற சேதுராமன், சரவணன், ராஜராஜேஸ்வரி, சிவமணி, கலையரசன்,தீபக்,கண்ணன் ஆகியோர் நேற்றுதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 42 சமையலர் காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பம் பெறப்பட்டது .
இதில் 1000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்தனர். இந்த நேர்காணலில் ஆண்கள் ,பெண்கள் ,விதவைகள் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் சமையலர் பணி இடங்களை நிரப்ப மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பணியிடங்களுக்காக விண்ணப்பம் அளித்தவர்களிடம் கதிர் சங்கர் பல லட்சம் முறைக்கேடாக பெற்றுக் கொண்டு சமையலர் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிந்த மனுதாரர்கள் மற்றும் பொதுநல மனுதாரர்கள் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை மற்றும் சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருக்கும் புகார் மனு அளித்துள்ளனர் .
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் தர்மபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.எனவே அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அவரிடம் மனுதாரர்கள் பணிக்காக வழங்கிய பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் .