திருவண்ணாமலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட எஸ்.பி… 10ஆயிரம்பேர் பதிவு செய்திருப்பதாக தகவல்
உலகம் முழுவதும் பரவிய கொரோனா இன்னும் முழுமையாக விடைபெற்றாமல் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டுஇருக்கிறது.
ஒராண்டில் அது ஏற்படுத்திய உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு மறக்க முடியாத நினைவுகளாகி விட்டது.
இந்தநிலையில் கொரோனா உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உள்ளிட்டோர்நேற்று திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பன்னர்..திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் .தற்போதுவரை 2,500 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்றும்மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 24இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும்பணி நடைபெற்றுவருகிறது .