திருவண்ணாமலையில் 10,02,2021, முதல், 26,02,2021, வரை நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று சென்னை மண்டல இராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக திருவண்ணாமலை வட்டம் அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில். வருகின்ற, 10,02,2021, முதல், 26, 02, 2021 ,வரை நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் கௌரவ் சேத்தி,(ChennaiArmyRenruitingOfficeDirectorColonelGauravSethi), மாவட்ட காவல் கண்காணிப்பாளர், எஸ், அரவிந்த், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ,சந்திரா, மற்றும் இக்கூட்டத்தில். காவல்துறை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் வருவாய்த்துறை. நகராட்சி நிர்வாகம். முன்னாள் படைவீரர் நலத்துறை. மகளிர் திட்டம். சுகாதாரத்துறை. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை. விளையாட்டுத்துறை. தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். போக்குவரத்துத் துறை. நெடுஞ்சாலைத்துறை. பொதுப்பணித்துறை. ஆகிய துறைகளின் மூலமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்து தரைக்கப்பட்டது, பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில். திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்துள்ள.25.000க்கும். மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதி அட்டை அனுப்பப்படும், மற்றும் முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4, நாட்களுக்கு முன்பு covid-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ் அனுமதி அட்டையுடன் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்,முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக covid-19 பரிசோதனை மேற்கொள்ளலாம், நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் இதில்.1.6.கீ.மீ. தூரம் ஓட்டப்பந்தயம். 9 அடி கால்வாய் தாவுதல். (DitchJump)PuilUps,Zig-Zag,Balance, ஆகிய உடற் தகுதி தேர்வுகள் நடத்தப்படும், இதனைத்தொடர்ந்து உடல் அளவிடு களுக்கான தேர்வு.(Physical measurement test), மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு.044-25674924/25674925. ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்துக் கொள்ளலாம். என்றார்.