குழந்தைகள் பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடி விசாரணை…

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் குழந்தைகள் பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடி விசாரணை மேற்கொள்ளவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களுடன் சேர்ந்து செயல்படவேண்டும் எனவும் அனைத்து மகளிர் காவல் நிலைய புகார்கள் மீதான விசாரணைக்கு சட்ட ஒழுங்கு காவல் துறை அதிகாரிகளும் உதவவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் குழந்தைகளில் குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலும் மேலும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் கூட தெரிவிக்க தயக்கம் காட்டுவதாலும் அவற்றை களையும் பொருட்டு காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் ஆலோசனைகள் படி கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.தினகரன் இ.கா.ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஏ.ஜி.பாபு இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதல் பேரில் அடையாறு மாவட்ட துணை ஆணையாளர் திரு.வி.விக்ரமன் இ.கா.ப அவர்கள் கானாத்தூர் காவல் நிலைய சரகத்தில் அதிகாரிகள், ஆளினர்களுடன் முட்டுக்காடு, கரிக்காட்டு குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைஅஞ்சல் அட்டை(Post Card) மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து காவல் நிலையம் வந்து புகார் அளிக்க இயலாத நிலையிலும் பாதுகாப்பு செயலியான (SOS App) பயன்படுத்த இயலாத நிலையிலும் குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாமல்கூட துணை ஆணையாளர் அலுவலக முகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு அஞ்சல் பெட்டியில் போடலாம் எனவும் அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் தன்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் அளிக்கப்படும் புகார் சம்பந்தப்பட்ட தகவல்கள் முற்றிலும் ரகசியம் காக்கப்படும் எனவும் இதனால் குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்க எந்த விதத்திலும் தயக்கம் காட்ட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு Good Touch மற்றும் Bad Touch குறித்த விழிப்புணர்வு அடையாறு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.சுதா அவர்களால் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்களுடன் அடையாறு துணை ஆணையரின் அலுவலக முகவரி இடப்பட்ட அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் நீலாங்கரை சரக உதவி அணையாளர் திரு.விஷ்வேஸ்வரய்யா உட்பட கானாத்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், ஆளினர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டதோடு அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கெரோனா தொற்று தடுக்க அறிவுரை வழங்கினர். புத்தாண்டு தொடக்கத்தில் காவல் துறையின் இத்தகைய புதிய முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *