தாய்லாந்தில் கார் ரேஸ் பந்தயத்தில்கோவை மாணவர்
![]()
கோவையில்,
கார்ட் ரேஸ் சர்வதேச போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் குரு தரன் பங்கேற்பு! இதற்காக தாய்லாந்து நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க்க உள்ளதாகவும், தாய் நாட்டுக்காக இறுதி வரை போராட உள்ளதாகவும் நெகிழ்ச்சி பேட்டி
தாய்லாந்து, நாட்டில், வரும் 25ம் தேதி, மற்றும் 26ஆம் தேதி ஆகிய இரு நாட்கள், சர்வதேச சிலாலம் கார்ட் ரேஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கோவை, ஜிவி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் குருதரன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த போட்டியில் ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக ஃபெடரேசன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அமைப்பு, குரு தரனை செலக்ட் செய்துள்ளது .
மேலும் எஃப். எம் ஃபார்முலா பந்தயத்திற்கு பேஸ் கார்ட் ரேஸ் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ள நிலையில்,
இது குறித்து குருதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள கடந்த 6 மாதங்களாக நன்றாக பயிற்சி பெற்றுள்ளேன், எனது அப்பா ஒரு கார் பந்தய வீரர், எனவே எனது தந்தையுடன் கார் பந்தயம் பயிற்சி மையத்திற்கு சென்று எனது அப்பா பயிற்சி பெறுவதை கண்டு தனக்கும் கார் ரேஸர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனடிப்படையில் இந்த பயிற்சியை தான் பெற்றுள்ளதாகவும், இதுவரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் தனக்கு கிடைத்துள்ளது எனவே, தாய்லாந்தில் நடைபெறும் இந்த போட்டிகளில், கண்டிப்பாக தங்க மெடல் வாங்குவேன். அதனை எனது தாய் திருநாட்டுக்காக எனது வெற்றியை சமர்பிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

