கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி
![]()
கோவையில் உள்ள சிஸ்கா இளைஞர் சமூக அறக்கட்டளை மற்றும் ஜுவல் ஒன் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர்.
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வலுவான சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் fuel the run fund the future என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டம் கோவை கொடிசியா அருகே நடைபெற்றது. கோவையைச் சேர்ந்த சிஸ்கா இளைஞர் சமூக அறக்கட்டளை மற்றும் ஜுவல் ஒன் நிறுவனம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் 21 கிலோமீட்டர் ,10 கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக கொடிசியா வளாகம் முன்பாக இந்த போட்டிகளை முன்னாள் தடகள வீரர் தனபால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர் சிறுமியர் முதல் ஆண்கள், பெண்கள் ,வயது முதிர்ந்தோர் என மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர். தொடர்ந்து அதில் பங்கேற்றவர்கள் களைப்படையாமல் இருக்கும் வகையில் நடன நிகழ்ச்சியும் நடைபெற்ற நிலையில் அதில் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.

