கோவையில் பள்ளி மாணவர்களு பரிசு வழங்கும் விழா
![]()
பிஎஸ்ஜி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், மற்றும் பெண்களுக்கான், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா. 

கோவையில் பிஎஸ்ஜி
நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டபட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற, 17 வயதுக்குட்பட்ட ஆண்கள், மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த 06ம் தேதி முதல் 09ம் தேதி வரை நடைபெற்று வந்தது.
இம்மாவட்ட அளவிலான போட்டியில் 14 ஆண்கள் அணிகளும், 13 பெண்கள் அணிகளும் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறன், ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தினர்.
போட்டியின் நிறைவு விழாவை தொடர்ந்து இன்று, பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு மின்வாரிய உதவி நிர்வாக அலுவலர் அனில்குமார், மற்றும் கால்பந்து நடுவர், ஸ்ரீகிருஷ்ணா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பிஎஸ்ஜி பள்ளிகளின் செயலாளர் நந்தகோபாலன் மற்றும் பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். தொடர்ந்து
விழாவின் முக்கிய நிகழ்வாக வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆண்களுக்கான முதல் பரிசை திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளி பிடித்ததுடன், ₹20,000 ரூபாய் ரொக்க பரிசையும் வென்றது.
இரண்டாம் பரிசை ஈரோடு இராஜேந்திர மெட்ரிக்குலேசன் பள்ளி பிடித்ததுடன் 10,000 ரூபாய் பணத்தையும் தட்டி சென்றது. இதே போல
மேலும் சிறப்பாக பெண்கள் அணியில் முதல் பரிசை உடுமலைப்பேட்டை என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை கோவை மணி மேல்நிலை பள்ளியும் தட்டி சென்றது. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குத் தனிநபர் கோப்பைகள், குழுவாக திறமைகளை வெளிபடுத்திய அணிகளுக்குக் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
இறுதியாக நடைபெற்ற நன்றியுரையில், சிறப்பு விருந்தினர்கள், பிஎஸ்ஜி நிர்வாகம், பள்ளி நிர்வாகம், போட்டி ஏற்பாட்டாளர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டி, மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குழு ஒற்றுமை, ஒழுக்கம், தலைமைத்துவம், விடாமுயற்சி மற்றும் விளையாட்டு நற்பண்புகளை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பிஎஸ்ஜி நூற்றாண்டு விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் அமைந்த்து.

