சென்னை வியாசர்பாடி ஆரிய சமாஜ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழா
![]()
சென்னை வியாசர்பாடி ஆரிய சமாஜ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழா
சென்னை வியாசர்பாடி ஆரிய சமாஜ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழாவில் பொதிகை தொலைக்காட்சியின் செய்தி பிரிவு முன்னாள் தலைவர் ஐ விஜயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். புது தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு நினைவு கூறும் வகையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது போன்று இந்த பள்ளியிலும் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
விழாவில் பேசிய அவர் நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் கடந்தாலும் நாம் இன்னும் ஒரு வலுவான ஜனநாயகத் நாடாக இருப்பதற்கு காரணம் நம்முடைய வலுவான அரசியல் அமைப்பு சட்டம். இந்த நன்னாளில் இந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளையும் நாம் நினைவு கூற வேண்டும். தில்லையாடி வள்ளியம்மை, வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமதுரை, குயிலி, வீரமங்கை வேலு நாச்சியார் உட்பட அறியும் மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகளை மாணவர்கள் நினைத்து அவர்களுடைய வரலாற்றைப் படித்து புரிந்து கொண்டு இந்த நாட்டின் வளர்ச்சிக்காக தங்களின் ஒரு பங்களிப்பாவது அளிக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார் அப்பொழுதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கணவன 2047 க்குள் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறி இந்தியா உலகிற்கு விஸ்வ குருவாக வழிகாட்டும் என்றார். விழாவில் பள்ளியின் தாளாளர் நிஷா நாங்கியா, ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . விழாவில் தேசபக்தியை மாணவர் மத்தியில் ஊட்டும் வகையில் மாணவ மாணவியர் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

