CMDA ஆன்லைன் திட்ட அனுமதி சீர்திருத்தம் அவசியம்

Loading

CMDA ஆன்லைன் திட்ட அனுமதி முறைமையில் உலகத் தரச் சீர்திருத்தங்கள் அவசியம்: “One Nation – One Property – One Approval System” உருவாக வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆலோசனைக் கூட்டத்தில் FAIRA தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தல்

 

தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் குடிமக்கள் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் திட்ட அனுமதி (Online Planning Permission Portal) தொடர்பான பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி கலந்து கொண்டு, CMDA அனுமதி முறைமையை உலகின் முன்னேறிய நாடுகளுக்கு இணையான டிஜிட்டல் நிர்வாக தளமாக மாற்றுவதற்கான விரிவான சீர்திருத்தப் பரிந்துரைகளை முன்வைத்தார்.

அவர் தனது உரையில், தமிழ்நாட்டில் வீடு கட்டுதல், வணிகக் கட்டிடம் அமைத்தல், தொழிற்சாலை உருவாக்குதல் அல்லது நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான எந்த திட்டத்திற்கும் அனுமதி பெறுவதில் பொதுமக்கள், தொழில்முனைவோர், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பல்வேறு அலுவலகங்களை நாட வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது எனக் குறிப்பிட்டார்.

ஒரே சொத்திற்கான தகவல்கள் பல்வேறு துறைகளில் தனித்தனியாக பராமரிக்கப்படுவதால் காலதாமதம், நிர்வாக சிக்கல்கள், முரண்பட்ட தரவுகள், தேவையற்ற செலவுகள் மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரே சொத்து – ஒரே தரவு – ஒரே அனுமதி” என்ற புதிய நிர்வாக தத்துவம் தேவை

டாக்டர் ஆ. ஹென்றி தனது உரையில்,

“இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா, ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சொத்து மற்றும் கட்டிட அனுமதி தொடர்பான முறைமைகள் இன்னும் பல்வேறு துறைகளில் சிதறிக்கிடக்கின்றன. இதை மாற்றி ‘One Nation – One Property – One Approval System’ என்ற தேசிய அளவிலான நிர்வாக மாதிரியை தமிழ்நாடு முன்னோடியாக உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அனைத்து துறைகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட வேண்டும்

CMDA Portal உடன் பின்வரும் துறைகள் கட்டாயமாக API Integration மூலம் இணைக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்:

வருவாய்த்துறை / பதிவுத்துறை /  தமிழ்நிலம் (Tamil Nilam) / பட்டா மற்றும் சிட்டா தரவுத்தளம் / FMB மற்றும் நில அளவைப் பதிவுகள் / நில அளவை மற்றும் நில பதிவுத்துறை / சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் / DTCP /  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை / மின்சார வாரியம் / TWAD / சென்னை குடிநீர் வாரியம் /  தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை / விமான நிலைய ஆணையம் /  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைகள் /  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் / வனத்துறை / தொல்லியல் துறை /  பேரிடர் மேலாண்மை ஆணையம் / கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் /  நீர்வளத்துறை / RERA

இதன் மூலம் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் தருணத்திலேயே அனைத்து துறைகளுக்கும் தானாக அனுப்பப்பட்டு ஒருங்கிணைந்த அனுமதி வழங்கும் முறை உருவாகும் என அவர் தெரிவித்தார்.

Auto-NOC மற்றும் Instant Clearance முறைமை. தற்போது ஒவ்வொரு துறையிடமும் தனித்தனியாக NOC பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கு பதிலாக,Single Submission → Auto Verification → Consolidated Approval என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Survey Number பதிவிட்டவுடன் GIS தொழில்நுட்பத்தின் மூலம், CRZ மண்டலம் / விமான நிலைய பாதுகாப்பு மண்டலம் / நீர்நிலை பாதுகாப்பு பகுதி / தேசிய நெடுஞ்சாலை பாதிப்பு பகுதி / பாரம்பரிய நினைவுச்சின்ன பாதுகாப்பு பகுதி / வனப்பகுதி ஆகியவை தானாகவே சரிபார்க்கப்பட்டு, NOC தேவையில்லாத நிலங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

AI மூலம் கட்டிடத் திட்டங்கள் தானியங்கி பரிசோதனை. சிங்கப்பூர், துபாய் மற்றும் தென் கொரியாவில் செயல்படும் நவீன தொழில்நுட்பங்களைப் போல AI Scrutiny Engine அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

கட்டிட வரைபடம் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே, Setback / Parking / FSI / Coverage / OSR / Fire Safety / Accessibility Norms / Structural Compliance போன்ற அம்சங்கள் தானாக சரிபார்க்கப்பட்டு குறைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.

சிறிய வீடுகளுக்கு உடனடி அனுமதி தெலுங்கானா மாநிலத்தின் TS-bPASS திட்டத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர்,

சிறிய குடியிருப்புகள் மற்றும் குறைந்த பரப்பளவிலான வீடுகளுக்கு Self Certification அடிப்படையில் உடனடி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இதனால் அதிகாரிகள் மீது உள்ள தேவையற்ற பணிச்சுமை குறையும் என்றும் கூறினார்.

Deemed Approval – காலக்கெடுவுடன் கூடிய நிர்வாகம் குடிமக்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் கிடக்கக் கூடாது. எனவே, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அதிகாரிகள் முடிவு எடுக்காத பட்சத்தில் தானாகவே “Deemed Approval” வழங்கப்படும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தினார்.

இது முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சொத்திற்கும் டிஜிட்டல் பாஸ்போர்ட். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்துவமான Property Digital Passport உருவாக்கப்பட வேண்டும்.

அதில். பட்டா / சிட்டா / FMB / EC / Planning Approval / Building Approval / Property Tax / Water Connection / Electricity Connection

உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என அவர் கூறினார்.

மக்களுக்கு முழு வெளிப்படைத்தன்மை. Citizen Dashboard மூலம், கோப்பு எந்த அதிகாரியிடம் உள்ளது எத்தனை நாட்களாக நிலுவையில் உள்ளது அடுத்த நடவடிக்கை என்ன அனுமதி எப்போது வழங்கப்படும் என்பதை பொதுமக்கள் நேரடியாக அறியும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இது நிர்வாக வெளிப்படைத்தன்மையை பெரிதும் உயர்த்தும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கான Vision 2050 தனது உரையின் நிறைவில் டாக்டர் ஆ. ஹென்றி,

“எதிர்கால தமிழ்நாட்டில் ஒரு குடிமகன் Survey Number ஒன்றை மட்டும் பதிவிட்டாலே நில உரிமை, நில வகை, அனுமதிக்கப்பட்ட பயன்பாடு, கட்டிடத் தகுதி, தேவையான NOC-கள், கட்டண விவரங்கள் மற்றும் அனுமதி பெறும் கால அளவு உள்ளிட்ட அனைத்தையும் அறியக்கூடிய நிலை உருவாக வேண்டும். அதுவே உண்மையான டிஜிட்டல் நிர்வாகம். அதுவே ஊழலற்ற, வெளிப்படையான, முதலீட்டாளர்களுக்கு உகந்த தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும்” என்றார்.

மேலும், CMDA Portal ஒரு சாதாரண விண்ணப்பப் பதிவேற்ற தளமாக இல்லாமல், Smart Urban Governance Platform, Integrated Property Management System, மற்றும் Single Window Digital Approval Ecosystem ஆக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனுமதி காலம் கணிசமாகக் குறையும், முதலீடுகள் அதிகரிக்கும், தொழில்முனைவோரின் நம்பிக்கை உயரும், நிர்வாகத் திறன் மேம்படும், ஊழல் வாய்ப்புகள் குறையும், பொதுமக்களின் நேரமும் பணமும் மிச்சமாகும். அதேசமயம் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நகர்ப்புற நிர்வாக மாநிலமாக உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

0Shares