முன்னாள் மாணவமாணவிகளின் வெள்ளிவிழா ஆண்டு

Loading

 

சிவகங்கை

பள்ளித்தம்மம் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின்
முன்னாள் மாணவ மாணவிகளின் வெள்ளிவிழா ஆண்டு சந்திப்பு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள பள்ளித்தம்பம் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 1999-2001 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளின் வெள்ளி விழா (25 ஆம் ஆண்டு) சந்திப்பு மிகுந்த உற்சாகத்துடனும் நினைவுகளின் இனிமையுடனும் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருள்தந்தை ஜெரால்ட் பிரிட்டோ தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். பள்ளியின் தலைமையாசிரியர் அருள்தந்தை ஆண்டோ வேதியியல் ஆசிரியர் ஆரோக்கியசாமி இயற்பியல் ஆசிரியர் ஜேம்ஸ் குமார் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர் சத்ரபதி சிவாஜி மற்றும் கருப்பையா மனைவியும் குடும்பத்துடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். NITCO தொடர்பாளர் மீனாள் வரவேற்புரையாற்றினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய முன்னாள் மாணவ மாணவிகள் தங்களின் பள்ளி நாட்களை மீண்டும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் சிரிப்பு உற்சாகம் மற்றும் உணர்ச்சிமிக்க உரையாடல்களால் நிரம்பியிருந்தது. முன்னாள் மாணவ மாணவிகள் திருச்சி மாத்தூர் புனித வின்சென்ட் அகாடமி ICSE பள்ளியின் முதல்வர் அருள்தந்தை சந்தோஷ் முதுநிலை விஞ்ஞானி முனைவர் ஆனந்தராஜ் ஜப்பான் NITCO டெக்னாலஜி நிறுவுனர் பிரபு ஜெனரேசன் நிறுவன செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி பாலமுருகன் அரசு மருத்துவ செவிலியர் மகேஸ்வரி ஐடி குவாலிட்டி மேலாளர் குழந்தை ஆரோக்கிய செல்வி ஆசிரியை இமாகுலேட் சுதா நிர்மலாதேவி டைல்ஸ் உரிமையாளர் பிரபு ஆகியோர் தங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து நண்பர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களை நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக அவர்களை உருவாக்கிய இரண்டு மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியது நிகழ்விற்கு உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தை சேர்த்தது. மாணவர்கள் தங்களின் நன்றியையும் மரியாதையையும் ஆசிரியர்களுக்கு பொன்துகில் அணிவித்தும் நினைவுப்பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டது இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

அவர்களின் குழந்தைகள் பாரதநாட்டியம் யோகா சிலம்பம் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் கவர்ந்தனர். இந்த சந்திப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நிலையான உறவை வெளிப்படுத்தும் ஒரு அழகான நிகழ்வாக அமைந்தது. இது ஒரு சாதாரண கூடுகை அல்ல. பகிர்ந்த நினைவுகள் நீண்டநாள் நட்புகள் மற்றும் கல்வியின் நிலையான தாக்கத்தை கொண்டாடும் விழாவாக இருந்தது. வெளிநாடுகளிலுள்ள நண்பர்கள் வீடியோ ஜூம் நிகழ்வில் கலந்துகொண்டு உறவாடிக்கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் (மோமென்டோ) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அனைவருக்கும் மனநிறைவும் எதிர்காலத்திலும் தொடர்பில் இருப்போம் என்ற உறுதியையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.

சோனி நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் நடராஜன் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் வீரபாண்டி டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் விஜய் அன்பு எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் ஆரோக்கியராஜா சிறப்பாக செய்திருந்தனர்.

0Shares