நாம்தமிழர்கட்சி வேட்பாளர்செந்தில்குமார் மனுதாக்கல்

Loading

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் முதல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செந்தில்குமார் ஏர் கலப்பையுடன் வந்து வேட்புமனு தாக்கல் :

திருவள்ளூர் ஏப் 31 : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 30-ஆம் தேதியான இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், மறுநாள் 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் 9-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 30-ஆம் தேதியான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதன்படி வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும் என்றும், வேட்பாளரையும் சேர்த்து  5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முதல் நாளில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செந்தில்குமார் ஏர் கலப்பையுடன் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
0Shares