கோவையில் குருத்தோலை ஞாயிறு பவனி

Loading

கோவை
கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை ஆலாந்துறை அடுத்த மத்துவராயபுரம் பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலய ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று, கையில் குருத்தோலைகளை ஏந்தி பிடித்தபடி பாடல்களை பாடியபடி, பவனி வந்தனர். இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குறுத்தோலை ஞாயிறு நாளை கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் அனுசரித்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேவாலயத்தின் செயலாளர் டாக்டர் பிரின்ஸ் அருள்ராஜ், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டலக்குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானபிரகாசம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கிறிஸ்துவ பாடல்களை பாடியும், நகர் பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். ஏழை எளிய மக்களால் இயேசு வரவேற்க்க பட்ட தாழ்மையின் அடையாளமாக பார்க்கப் பட்டது. இந்த விழா இயேசுவின் அரசத்தன்மை தாழ்மை மற்றும் மீட்பு பணியை மக்களுக்கு நினைவுட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares