காரில் கொண்டுவரப்பட்ட 25 சவரன் நகை பறிமுதல்

Loading

திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட 25 சவரன் நகை பறிமுதல் :

திருவள்ளூர் மார்ச் 28 : தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  நடைமுறையில் உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூர் சுங்க சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னைக்கு நோக்கி வந்துகொண்டிருந்த AP 03, CU 2024 என்ற பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த இளைஞர் ராகேஷ் என்பதும் அவர் சோழிங்கநல்லூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதும்  தெரியவந்தது மேலும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை காட்டி விட்டு நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட தங்க மற்றும் வெள்ளி நகைகள் நகை கணக்கீட்டாளரை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்ட பின் பத்திரமாக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
0Shares