50,லட்சம்மதிப்பிலான45சவரன் தங்கநகைகள்பறிமுதல்
![]()
திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50,லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு :
திருவள்ளூர் மார்ச் 24 : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர் அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50, லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து 45 சவரன் தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து திருவள்ளூர் தொகுதி தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் உளுந்தை கிராமத்தை சேர்ந்த மதன்குமார், இவரது மனைவி பூஜா தம்பதியினருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் வீட்டில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை மப்பேடு பகுதியில் உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து உரிய ஆவணங்களை செலுத்தி நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்க நகைகளை சீல் வைத்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

