திருமணமாகி 4 வருடத்தில் விவாகரத்து
![]()
திருமணமாகி 4 வருடத்தில் விவாகரத்து பெற்ற விஜய் பட நடிகை ஹன்சிகா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தில் நடித்திருந்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா நடிப்பில் கடைசியா 2024 கார்டியன் என்ற படம் வெளியானது.
ஒருசில காதல் தோல்விக்கு பின் கடந்த 2022ல் நீண்டகால நண்பர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
விவாகரத்து
கடந்த ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், இருவருக்கும் மும்பை குடும்பநல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை வழங்கி உத்தரவிட்டது.
ஹன்சிகா தன்னுடைய விவகாரத்து விஷயத்தில் முன்னாள் கணவர் சோஹைல் கதுரியாவிடம் இருந்து எந்தவொரு ஜீவனாம்ச தொகையையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

