சல்மான் கானுக்கு ஜோடியாகிறார் திரிஷா
சல்மான் கானுக்கு ஜோடியாகிறார் திரிஷா
பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
இப்படத்தை முடித்து மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்பு தகவல் வெளியானது. அதோடு இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னால் 2010ம் ஆண்டு அக்ஷய் குமார் நடித்த கட்டா மீட்டா படத்தில் திரிஷா நடித்திருந்தார். திரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மோகன்லாலின் ‘ராம் பார்ட் 1’ படத்தை கைவசம் வைத்துள்ளார்.