பறிப்பிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் 17 ம் தேதி ஏலம்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் பறிப்பிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 17 ம் தேதி ஏலம் : எஸ்.பி. விவேக்கானந்த சுக்லா அறிவிப்பு :
 
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 5 வாகனங்களில் 2 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 2 ஆறு சக்கர வாகனங்கள் வருகின்ற 17.03.2026 அன்று காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு கீழ் இயங்கி வரும், எளாவூர் சோதனை சாவடி அருகே 5 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5,000 செலுத்த வேண்டும்.அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12% மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% உடனடியாக செலுத்தி விட வேண்டும். வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். மற்றும் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக்கானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
0Shares