திருத்தணிசர்க்கரைஆலைகரும்புஅரைவைபணி10-ல்துவங்கும்

Loading

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை,  கரும்பு அரைவை பணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மார்ச் 05 : திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரைவை பணிகள்,  கடந்த 27.10.2025 தேதியில் துவங்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட  கரும்பு அரைவை குறியீடான 200000 மெ.டன்களில்,  02.03.2026 தேதி வரை 186971 டன்கள் கரும்பு அரைவை செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள  கரும்பு முழுவதையும் 10.03.2026 தேதிக்குள் அரைவை செய்து கரும்பு அரைவை பணிகளை நிறைவு செய்திட  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே,  2025-26ம் ஆண்டு அரைவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு  கரும்பு பதிவு செய்து, தற்போது  கரும்பு அறுவடை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள்  மற்று கரும்பு வெட்டு உத்திரவு பெற்று  நாளது தேதி வரை கரும்பு அறுவடை  செய்யாமல் உள்ள விவசாயிகள் உடனடியாக அறுவடை செய்து 10.3.2026 தேதிக்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு அனுப்பவும், இது தொடர்பாக விவசாய பெருமக்கள் தங்களது கோட்ட  கரும்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares