பெயிராகூட்டமைப்பு பதிவுத்துறையை வன்மையாக கண்டிக்கிது

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

பொதுமக்கள் தங்களது சொத்து சம்பந்தமான முழுமையான விவரங்கள் அனைத்தையும் 10 பக்கங்களுக்குள் அடங்கும் வகையில் பத்திரங்களை தயார் செய்ய வேண்டும் எனவும், இதற்கு மேல் கூடுதலாகும் ஒவ்வொரு பக்கத்திற்கும் நூறு ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் பதிவுத்துறை அறிவித்துள்ளதாக கடந்த 26.02.2026 அன்று பத்திரிகைகளில்‌ வெளியான செய்தி பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பதிவுத்துறை வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்பு குறித்து வெளிப்படையாக கூறுவதென்றால் பதிவுத்துறை நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தற்பொழுது செயல்பாட்டிற்கு வந்துள்ள ஸ்டார் 3.0 மென்பொருளின் செயல் திறனில்  உள்ள குறைகளை களைந்து  சேவைகளை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்வதற்கான செயல்களில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும்விட, சமீப காலமாக புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு எந்தெந்த வகையில் பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்து கல்லா கட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு பதிவு துறையின் செயல்பாடுகள் அமைநது்ள்ளன என்பதனை காணும் பொழுது பதிவுத்துறை கல்லா கட்டும் துறையாக மாறி வருகிறதா? என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மேற்கண்ட அறிவிப்பானது பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜாக போக்கு எனவும், பள்ளி / கல்லூரி தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அரை பக்கத்தில் சுருக்கி வரைக என கூறுவதற்கு இது தேர்வு வினாத்தாள் அல்ல பொதுமக்கள் தாங்கள் பாடுபட்டு சேர்த்த செல்வத்தைக் கொண்டு தங்களுக்காகவும் தங்களின் பிள்ளைகளின் எதிர்கால அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வாங்க கூடிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தை 10 பக்கங்களுக்குள் அடங்கும் வகையில் முடிக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதனை பதிவுத்துறை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தும் இத்தகைய அறிவிப்பு வெளியிட்டுருப்பதை பெயிரா கூட்டமைப்பு மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தங்களின் பதிவு சம்பந்தமான ஆவணங்களை தயார் செய்யும் போது சுபதினம், நாள், கிழமை, நேரம் பார்ப்பது மட்டுமல்லாது தங்களுக்கு அதிர்ஷ்டமான எண்கணிதம் (Numerology) மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பத்திர பக்கங்களின் எண்ணிக்கையை உருவாக்கிக் கொள்வதும், சம்பந்தப்பட்ட சொத்தின் முந்தைய உரிமை ஆவணங்கள். புதிய விற்பனை ஒப்பந்த நகல், வில்லங்கச் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல்,  அ-பதிவேடு, புலப்படம் (FMB), வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் உதாரணத்திற் விற்பவர்கள் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சொத்தின் மீது பத்து நபர்களுக்கு உரிமை இருக்கும் 10 நபர்களுடைய அடையாள அட்டைகள், அவர்களின் பெற்றோர்களின் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்,

அதுபோல் ஒரு சொத்தை இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து வாங்கும் பட்சத்தில் சம்பத்தப்பட்ட நபர்களின் அடையாள அட்டைகள் மற்றும் இரு சாட்சிகளின் ஆதார் அட்டை என இணைக்கும் பட்சத்திலும், சொத்து சம்பந்தப்பட்ட சொத்து வரி, குடிநீர், மின்சாரக் கட்டண ரசீதுகள், அடுக்குமாடி குடியிருப்பு அல்லது நிலம் தொடர்பான NOC, அரசுக்குச் செலுத்தப்பட்ட முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டண ஆதாரம், உள்ளாட்சி அமைப்புச் சான்றிதழ்கள் (Local Body Certificates) அது சம்பந்தமான உத்தரவுகள், CMDA / DTCP / TNRERA துறையிடமிருந்து பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், வீட்டு மனை பிரிவு  மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் பல்வேறு சர்வே எண்களின் தொகுப்பாக சொத்து அமையும் பட்சத்தில் ஐந்து முதல் பத்து சர்வே எண்கள், உட்பிரிவு எண்கள் மற்றும் அதன் நான்கு எல்லை விவரங்கள் என மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் 10 பக்கங்களுக்குள் அடங்குமாறு செய்வதற்கு, காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடைத்து வைத்த அகத்திய முனிவர் அல்ல பொது மக்கள் என்பதனை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் பதிவுத்துறை போலி ஆவண பதிவுகளை தடுப்பதற்கு பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி அவைகளை பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் முறையாக, முழுமையாக கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் அவர்கள் பல்வேறு அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் என வெளியிட்டு சார் பதிவாளர்கள் அவைகளை முறையாக பின்பற்றி பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதை அனைவரும் அறிந்ததே.

ஆயினும் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தங்களின் சொத்து சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் பெரும்பாலான   சார் பதிவாளர்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதும் இதனால் பொதுமக்கள் அல்லலுக்கு ஆளாகி வருவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

மேலும் இ-ஸ்டாம்பிங் எனப்படும் மின்னணு முறையில் ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் பட்சத்திலும் வருவாய் துறை அனுமதி சம்பந்தமான ஆவணங்கள், வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோர்களின் ஆவணங்கள். அடையாள அட்டைகள் என அனைத்து ஆவணங்களையும் 10 பக்கங்களுக்குள் அடங்கும் வகையில் பத்திரங்களை தயாரிப்பதற்கான நடைமுறை சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதனையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்பதிவுதுறையின் 18 வகையான சேவைகளை‌ உள்ளடக்கி பொதுமக்கள் மேற்கண்ட சேவைகளை எளிதில் பெற்று பயன் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 மென்பொருள் எந்த நோக்கத்திற்காக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதோ அதற்கான பயன் இதுநாள் வரை பொது மக்களுக்கு கிடைக்க பெறாமல் பெயரளவில் தான் உள்ளது.                    ஸ்டார் 3.0 மென்பொருள் நடைமுறைப்படுத்தப்பட்டதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பொதுமக்கள் சார் – பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் (presence less) மற்றும் காகிதமில்லா பரிவர்த்தனை ((Paper less Registration) தங்களது ஆவண பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதாகும். ஆனால் தற்பொழுது நடைமுறையில் பதிவுத்துறையின் இணையதளத்தில் தரவு சேமிப்பு (Data Storage) அதிகமாவதால் சர்வரின் செயல்பாடுகள் அதற்கு இணையாக ஈடு கொடுத்து வேகமாக செயல்பட முடியாமல் மிக மெதுவாகவும் மற்றும் அடிக்கடி கணினி செயலிழக்கும் (SYSTEM HANGING) நிலைக்கும் ஆளாகிறது.

ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட தகவல்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு 10 பக்கங்களுக்குள் அடங்கும் வகையில் பத்திரங்களை தயார் செய்ய வேண்டுமென தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பினை ரத்து செய்து பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டுமென பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

0Shares