ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன்செயற்குழு

Loading

ஈரோடு
ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் செயற்குழு கூட்டம்: புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் வீரர்களுக்குப் பெல்ட் வழங்கும் விழா!
ஈரோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷனின் முக்கியச் செயற்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.சக்திவேல் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் பொருளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் அல்தாப் ஆலம் கலந்துகொண்டு, சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாவட்டத்தில் கராத்தே கலையை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், எஸ்.ஜி.எஃப்.ஐ விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தகட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெறும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தின் நிறைவாக, ஈரோடு மாவட்டச் செயலாளர் குமார் நன்றி உரையாற்றி, மாநிலச் செயலாளருக்கு வீரத்தைப் பறைசாற்றும் வகையில் வீரவாள் வழங்கி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, கராத்தே தேர்வுகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0Shares