பொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம் ஒத்திவைப்பு

Loading

பொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம் ஒத்திவைப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் மற்றும் கிராமம், புல எண்: 329/2, 330/2pt, தேவசேனபுரம் கிராமம், புல எண்: 372/3Cpt, 374/2Apt, 378/10, 379/18, 383/5, வள்ளியம்மபுரம் கிராமம், புல எண்: 423/3pt, 424/1, 425pt, 426pt ஆகிய இடங்களில் மொத்தம் 19.58 ஹெக்டேர் பரப்பளவில், தி/ள். ஸ்ரீ சிமெண்ட் லிமிடெட் நிறுவனம், ஆண்டுக்கு 3.50 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட தனித்துச் செயல்படும் சிமெண்ட் அரைவை ஆலை அமைக்க உத்தேசித்துள்ளது.
இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்கும் கூட்டம், தி/ள். ஜோதி ராமசாமி மகால், அரக்கோணம் சாலை, வள்ளியம்மபுரம், திருத்தணியில், 24.02.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற இருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், இக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares