சுமைதூக்குவோர்மாநிலபாதுகாப்புசங்கம்ஆர்ப்பாட்டம்
![]()
திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் பிப் 23 : திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் அலுவலகத்தை சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ழைக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் என்றும் வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனடியாக வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும் என்றும் பத்தாண்டுகள் பணி முடித்தவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன் தேதியிட்ட பச்சை அட்டை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கூலி உயர்வை வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க கோரியும் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் நிலையில் இது வரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுவதாகவும் உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில் நாளை உள்ளிருப்பு போராட்டமும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்.

