வளர்ச்சிதிட்ட பணி ஆட்சியர்மு.பிரதாப் நேரில்ஆய்வு

Loading

மீஞ்சூர், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி ஆகிய பாதைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட  பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் பிப் 19 : மீஞ்சூர், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி ஆகிய பாதைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட  பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும்,  மீஞ்சூர் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளையும், மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி துறை சார்பில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையம் மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைகுளம் சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வேப்பம்பட்டில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும்,  செவ்வாய்பேட்டையில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை  விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களுர் ஊராட்சி காக்களூர் ஏரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இதில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன், உதவி பொறியாளர்கள் யாஸ்மின், நரசிம்மன், ஐசக் கெவின், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாச்சலம், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, உதவி பொறியாளர், நெடுஞ்சாலைகள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares