ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் சார்பாகஅன்னதானம்

Loading

ஈரோடு 
ஈரோடு  மாவட்டம், தாளவாடி, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில்14-வது மாதமாக 1500 க்கும் மேற்பட்டோருக்கு   அன்னதானம் 
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக  தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர்.  ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 14-வது மாதமாகச் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு  AKN வெஜிடபிள்ஸ் திரு.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பவர் கனெக்ட் உரிமையாளர் பாலாஜி,  அந்தியூர் சதீஷ், ஈரோடு ரவீந்திர குமார்  மற்றும் கோவில் அறங்காவலர்கள் அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்,  முதியோர்களுக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
0Shares