ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணி
![]()
திருவள்ளூரில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருவள்ளூர் பிப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளூர் பஜார் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் காந்தி சமுதாய கல்லூரி மற்றும் அன்னை தெரசா சமுதாய கல்லூரி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி சென்றனர்.
பேரணியில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் (திருவள்ளூர்), துணை இயக்குநர் (காசநோய்) சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் (தொழுநோய்) வசந்தி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுபாஷ், மாவட்ட நலக்கல்வியாளர்கள் டி.எ.சுப்பிரமணி, எஸ்.ஸ்ரீநிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

